கமலின் ‘தலைவன் இருக்கின்றான்’ எப்போது?

விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு படங்களைத் தொடர்ந்து ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தை உருவாக்கவிருப்பதாக கமல் அறிவிப்பு

செய்திகள் 27-Jul-2017 5:19 PM IST Chandru கருத்துக்கள்

ஒருபுறம் ‘பிக்பாஸ்’, இன்னொருபுறம் ட்விட்டரில் சமூக, அரசியல் கருத்துக்கள் என ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் பக்கம் திருப்பி வைத்திருக்கிறார் உலகநாயகன் கமலஹாசன். இதெல்லாம் செவ்வனே நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், சினிமா மீதும் கமலின் பார்வை பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. சிற்சில உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் காரணமாக ‘சபாஷ் நாயுடு’வின் கடைசி கட்ட படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே வந்தது. அது விரைவில் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார் கமல். அதோடு, ‘விஸ்வரூபம் 2’வின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடியும் தருவாயில இருப்பதால் அதனை ரிலீஸ் செய்யும் வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தையும் துவங்கவிருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கமலே அறிவித்திருப்பதால் உற்சாகத்திலிருக்கின்றனர் உலகநாயகன் ரசிகர்கள்.

#KamalHaasan #ThalaivanIrukkiran #Ulaganayagan #SabashNaidu #Vishwaroopam2 #Thoongavanam #BogBoss

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 - ட்ரைலர்


;