முதல் அமைச்சர் பதவிக்கு குறி வைக்கும் ராணா!

’பாகுபலி’யை தொடர்ந்து ராணா நடிப்பில் வெளியாகும் படம் ‘நான் ஆணையிட்டால்’

செய்திகள் 27-Jul-2017 3:35 PM IST VRC கருத்துக்கள்

பிரபல தெலுங்கு பட இயக்குனர் தேஜா இயக்கத்தில் ராணா கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘நான் ஆணையிட்டால்’. தெலுங்கில் ‘நானே ராஜு நானே மந்திரி’ என்ற பெயரில் உருவாகிய படமே தமிழில் ‘நான் ஆணையிட்டால்’ என்ற பெயரில் வெளியாகிறது. அரசியல் கலந்த குடும்ப கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ராணா, காஜல் அகர்வாலுடன் கேத்ரின் தெரெசா, நாசர், மயில்சாமி, ஜெகன், சிவாஜி ராஜா, அஷுதோஷ் ராணா முதலானோரும் நடித்திருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்று முன சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் தேஜா பேசும்போது,
‘‘நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன்! எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன்! சின்ன வயதிலிருந்தே எனக்கு சினிமா மீது பெரும் ஆர்வம் என்பதால் மும்பைக்கு சென்று 30-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணி புரிந்தேன். அதன் பிறகு ஹைதராபாத்துக்கு வந்து பல தெலுங்கு படங்களை இயக்கினேன். எனக்கு எம்.ஜி.ஆரை ரொம்பவும் பிடிக்கும் என்பதால் அவரது கேரக்டர் போல் ஒரு கேரக்டரை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. அதற்கு ஏற்ற மாதிரி எழுதிய கதைதான் ‘நான் ஆணையிட்டால்’.

அரசியல் கலந்த குடும்ப கதை இது. இந்த படத்தில் ராணாவை வேட்டி, சட்டையில் நடிக்க வைத்திருக்கிறேன். இந்த கதை தமிழ்நாட்டுக்கும் ரொம்பவும் பொருந்தும். காரைக்குடியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். அரசியல்வாதிகள் மீது பொதுமக்களுக்கு கோபம் வந்தால் ஒரு சாமானியன் கூட முதல் அமைச்சர் பதவிக்கு குறி வைப்பான் என்பது தான் படத்தின் மைய கரு! இதனை தமிழ் நாட்டு பின்னணியில் சொல்லியிருக்கிறேன். இந்த படத்திற்காக நாங்கள் ஏற்கெனவே எடுக்கப்பட்ட பல காட்சிகள் ஜெயலலிதா அம்மையாரின் மறைவுக்கு பிறகு இங்கு நடந்து வரும் சில அரசியல் சம்பவங்களோடு ஒத்துப்போகும் விதமாக அமைந்துள்ளது. இந்த படம் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா ஆண்டில் வெளியாவது எங்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

நடிகர் ராணா பேசும்போது, ‘‘சமீபத்தில் நான் நடித்து வெளியாகிய ‘காஸி’, ’பாகுபலி’ ஆகிய படங்களுக்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள். அதைப்போல இந்த படத்திற்கும் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நானும் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன் தான்! எனக்கும் எம்.ஜி.ஆரை ரொம்பவும் பிடிக்கு. அவர் நடித்த ஒரு படத்தின் டைட்டிலில் அவர் போன்ற ஒரு கேரக்டரில் நடித்திருப்பது பெருமையாக இருக்கிறது’’ என்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பல வெற்றிப் படங்களை தயாரித்த சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகிறது.

#NaanAanaiyittal #RanaDaggubati #KajalAgarwal #Teja #CatherineTresa #Naaser #mayilsamy #Baahubali

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;