சிபிராஜுக்கு ‘சைத்தான்’ இயக்குனரை பரிந்துரைத்த விஜய் ஆண்டனி!

‘க்ஷணம்’ தெலுங்குப்பட தமிழ் ரீமேக்கை இயக்க ‘சைத்தான்’ இயக்குனரை விஜய் ஆண்டனி தனக்கு பரிந்துரைத்ததாகக் கூறிய சிபிராஜ்

செய்திகள் 27-Jul-2017 12:42 PM IST Chandru கருத்துக்கள்

‘கட்டப்பாவ காணோம்’ படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காதபோதும், தனது அடுத்த படமான ‘சத்யா’விற்காக பெரிய ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார் சிபிராஜ். தெலுங்கில் சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற ‘க்ஷணம்’ படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் ‘சத்யா’ படத்தை இயக்குவதற்கு பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தனதுக்கு விஜய் ஆண்டனிதான் பரிந்துரைத்தார் என நடிகர் சிபிராஜ் தெரிவித்துள்ளார்.

‘கட்டப்பாவ காணோம்’ படம் உருவாகிக் கொண்டிருந்தபோது யதேச்சையாக ‘க்ஷணம்’ படத்தைப் பார்த்தாராம் சிபிராஜ். படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போகவே, தனது குடும்பத்தினரையும் அப்படத்தைப் பார்க்க பரிந்துரைத்துள்ளார். அவர்களும் பார்த்துவிட்டு, ‘இப்படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் நீயே நடிக்கலாம்’ என யோசனை கூறியதால், உடனடியாக ‘க்ஷணம்’ படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளது சத்யராஜின் நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி.

‘சத்யா’ பட ஷூட்டிங் சமயத்தில் சிபிராஜே டயர்டாகும் வகையில் பல ‘டேக்’குகள் கூறினாராம் ‘சைத்தான்’ புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. ஆனால், படத்தின் இறுதி வடிவத்தைப் பார்த்தபோது, தான் பட்ட கஷ்டங்களுக்கு முழுப்பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்திருப்பதாக சிபிராஜ் தெரிவித்துள்ளார்.

#Sibiraj #Kshanam #PradeepKrishnamoorthy #VijayAntony #KattapaavaKaanom #Saithan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திமிருபுடிச்சவன் டீஸர்


;