’விஐபி-2’, ‘கூட்டத்தில் ஒருத்தனு’டன் களமிறங்கும் நிபுணன்!

அருண் வைத்திய நாதன் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள ‘நிபுணன்’ 28-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 20-Jul-2017 12:47 PM IST VRC கருத்துக்கள்

அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜுன், வரலட்சுமி, பிரசன்னா, ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி மணிரத்னம் முதலானோர் நடிக்கும் ‘நிபுணன்’ திரைப் படத்தை இம்மாதம் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென்று நடந்த தியேட்டர் ஸ்டிரைக்கால் நிறைய படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அதில் ‘நிபுணன்’ திரைப்படமும் ஒன்று! இந்நிலையில் ‘நிபுணன்’ திரைப்படத்தை வருகிற 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதே தினம் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி-2’ மற்றும் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் அசோக் செல்வன், பிரியா ஆனந்த் நடித்துள் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ ஆகிய திரைப்படங்களும் வெளியாகவிருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ‘விஐபி-2’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ ஆகிய படங்களுடன் இப்போது அர்ஜுனின் நிபுணனும் களமிறங்கவிருப்பதால் அடுத்த வெள்ளிக்கிழமை 3 படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.

#Nibunan #Arjun #ArunVaidhiyanathan #Varalakshmi #Prasanna #Dhanush #VIP2 #KootathilOruthan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோலமாவு கோகிலா - கன் - இன் காதல் வீடியோ பாடல்


;