பிரியா ஆனந்துக்கு ‘கூட்டத்தில் ஒருத்த’னை பிடிக்க காரணம்?

பிரியா ஆனந்த்,  ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தில் நடிக்க காரணம்?

செய்திகள் 18-Jul-2017 11:42 AM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள படம் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அசோக் செல்வன், பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்ன இசை அமைத்துள்ளார். இம்மாதம் 28-ஆம் தேதில் ரிலீசாகவிருக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த் நடிக்க ஒப்புக்கொணடதற்கான காரனம் குறித்து அவர் பேசும்போது,
‘‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதையை கேட்பதற்கு முன் எந்த படத்திலும் இனி நடிக்க கூடாது என்பது போல் என் மனநிலை இருந்தது. ஆனால் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதையை கேட்டதும் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அவ்வளவு பாசிட்டிவான கதை இது. மிக சிறந்த படங்களை தயாரிக்கும் எஸ்.ஆர்.பிரபு அவர்களின் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றுவது நல்ல அனுபவம். நிவாஸ் கே. பிரசன்னா தான் படத்திற்கு இசை அமைப்பாளர் என்றதும் எனக்கு நல்ல காதல் பாடல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். தற்போது நான் எதிர்பார்த்ததை விட மிக சிறந்த பாடல்கள் கிடைத்துள்ளது. நல்ல ஒரு கருத்தை சொல்ல வரும் இந்த படம் எனக்கு பிடித்தது மாதிரி உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்’’ என்றார்.

#KootathilOruthan #AshokSelvan #PriyaAnand #Gnanavel #SRPrabhu #DreamWarriorPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூர்யா 36 படத்துவக்கம் - வீடியோ


;