’நானும் ஒரு மிடில் பெஞ்சர்தான்’ -அசோக் செலவன்

’கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து படத்தின்  கதாநாயகன் அசோக் செல்வன் பேசியதாவது:

செய்திகள் 18-Jul-2017 10:51 AM IST VRC கருத்துக்கள்

‘‘கூட்டத்தில் ஒருத்தன்’ என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். நான் இந்த படத்தில் நடிக்க முக்கிய காரணம் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா தான். என்னுடைய அக்காவின் திருமணத்தை முன்னிட்டு நான் நிவாஸ் கே பிரசன்னாவுக்கு பத்திரிக்கை வைக்க சென்றிருந்தேன். அப்போது அவரிடம் அவர் என்னென்ன படங்களுக்கு இசையமைத்துக்கொண்டு இருக்கிறார் என்று கேட்டேன். அப்போது இந்த படத்தை பற்றியும் இந்த படத்தின் கதையை பற்றியும் என்னிடம் கூறினார். ‘கூடத்தில் ஒருத்தன்’ படத்தின் கதை சுருக்கத்தை கேட்டவுடன் எனக்கு பிடித்துவிட்டது. என்னென்றால் நானும் இப்படத்தின் கதையில் வருவது போல் ஒரு ’மிடில் பெஞ்சர்’ தான். கூட்டத்தில் ஒருத்தன் கதைக்கு கதாநாயகன் முடிவாகவில்லை என்பதை தெரிந்து கொண்டு நான் இயக்குநர் ஞானவேல் அவர்களை சந்திக்க அவருடைய அலுவலகத்துக்கு சென்றேன். அவரை சந்தித்து நான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதையை படித்தேன். கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நானும் ஒரு மிடில் பெஞ்சர் தான். என்னோடு ஒத்துபோகும் கதையில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றேன். இயக்குநர் ஞானவேல் நான் இந்த கதையில் நடிப்பதற்கு சம்மதித்த பிறகு இந்த கதைக்காக நான் வேற மாதிரி மாற வேண்டும் என்று கூறி என்னை முற்றிலும் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு மாற்றினார். இப்போது நிலவி வரும் குழப்பமான சூழ்நிலையில் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ மிகவும் பாசிடிவான திரைப்படமாக இருக்கும். எல்லோருக்குள்ளும் ஒரு நல்எண்ணத்தை விதைக்கும் திரைப்படமாக இது இருக்கும்’’ என்றார்.

#KootathilOruthan #AshokSelvan #PriyaAnand #Gnanavel #SRPrabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூர்யா 36 படத்துவக்கம் - வீடியோ


;