லண்டனில் ஜி.வி.பிரகாஷின் 100% காதல்!

ஜி.வி.பிரகாஷின் ‘100% காதல்’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விரைவில் துவங்கவிருக்கிறது!

செய்திகள் 15-Jul-2017 12:31 PM IST VRC கருத்துக்கள்

நாகசைதன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான படம் ‘100% லவ்’. இந்த படம் தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘100% காதல்’ என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது என்றும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார் என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். எம்.எம்.சந்திரமௌலி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரவில் லண்டனில் துவங்கவிருக்கிது. இப்படத்தின் 90% காட்சிகளின் படப்பிடிப்பு லண்டனிலும் மீதமுள்ள 10% காட்சிகள் இந்தியாவிலும் நடக்கவிருக்கிறதாம். ஜி.வி., லாவண்யா திரிபாதியுடன் இப்படத்தில் நாசர், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்து கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை டட்லி கவனிக்க, கலை இயக்கத்தை தோட்ட தரணி கவனிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

#GVPrakashKumar #LavanyaTripathi #100%Kadhal #NagaChaitanya #Tamannah #MMChandramouli #Naaser #ThottaTharani

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 % காதல் டீஸர்


;