‘ஐ’ பட பாணியில் அதர்வாவின் சைக்கிள் ஃபைட்!

அதர்வாவின் ‘இமைக்கா நொடிகளு’க்காக பெங்களூருவில் சைக்கிள் ஃபைட்!

செய்திகள் 11-Jul-2017 12:44 PM IST VRC கருத்துக்கள்

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷிகன்னா, அனுராக் காஷ்யாப், விஜய்சேதுபதி முதலானோர் நடிக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’. ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரித்து வரும் இப்படத்திற்காக பெங்களூரு நகரில் சர்வதேச தரத்தில் ஒரு சைக்கிள் சண்டை காட்சியை படமாக்கியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இந்த சண்டைக் காட்சியை படமாக்க ஹாங்காங் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற சைக்கிள் சண்டை நிபுணர் லீஹான்யு என்பவரை வரவழைத்து படமாக்கியுள்ளனர்.

படத்தின் சண்டை இயக்குனர் ‘ஸ்டன்’ சிவாவுடன் இவர் பணியாற்ற அதர்வாவுடன் பல சண்டை கலைஞர்கள் மோதிய இந்த சண்டை காட்சி படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார் இயக்குனர் அஜய்ஞானமுத்து. விக்ரம் நடித்த ‘ஐ’ படத்தில் இடம் பெற்ற
சைக்கிள் ஃபைட் மாதிரி அதர்வாவின் இந்த சைக்கிள் ஃபைட் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ‘டிமான்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் இரண்டாவது படம் இது. இந்த படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

#AjayGnanamuthu #ImaikkaNodigal #LeeHoniyu #DemonteColony #AtharvaaMurali #Nayanthara #VijaySethupathi #AnuragKashyap

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்


;