14-ம் தேதி துவங்குகிறது சரத்குமாரின் ரெண்டாவது ஆட்டம்!

சரத்குமார் நடிக்கும் ‘ரெண்டாவது ஆட்ட’த்தின் படப்பிடிப்பு 14ஆம் தேதி துவங்குகிறது!

செய்திகள் 10-Jul-2017 4:08 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் பிருத்திவி ஆதித்யா இயக்கத்தில் ‘ரெண்டாவது ஆட்டம்’ என்ற படத்தில் கதாநாயகனாக சரத்குமாரும், கதாநாயகியாக லட்சுமி ப்ரியாவும் நடிக்கிறார்கள் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். ‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் பி.கார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை ஏற்கெனவே நடந்து முடிந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 14ஆம் தேதி துவங்குகிறது. சரத்குமார், லட்சுமி பிரியாவுடன் ‘மைம்’ கோபி, நந்தினி ராய், சுரேஷ் மேனன், சேதன் முதலானோரும் நடிக்கும் இந்த படத்திற்கு சுந்தர்மூர்த்தி இசை அமைக்கிறார். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படம் தவி ‘சென்னையில் ஒருநாள்-2’, ‘அடங்காதே’ ஆகிய படங்களிலும் நடிக்கிறார் சரத்குமார்.

#RendavathuAattam #Sarathkumar #PrithiviAadhitya #LakshmiPriya #BigPrintPictures #MimeGopi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஓடுற நரி வீடியோ பாடல் - எச்சரிக்கை


;