கெட்டவனை தூசி தட்டும் சிம்பு!

’AAA’ தந்த ஏமாற்றம் - கெட்டவனை கையிலெடுக்கும் சிம்பு!

செய்திகள் 8-Jul-2017 12:43 PM IST VRC கருத்துக்கள்

சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம், சிம்பு உட்பட அப்பட குழுவினர் அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில் தான் ஏற்கெனவே துவக்கி வைத்து சில காரணங்ளால் நிறுத்தி வைக்கப்பட்ட ‘கெட்டவன்’ படத்தை மீண்டும் எடுக்கும் முயற்சியில் சிம்பு இறங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே நமிதா, லேகா வாஷிங்டன், சந்தானம் முதலானோருடன் கூட்டணி அமைத்து உருவாக்க துவங்கிய ‘கெட்டவனை’ அப்படியே கைவிடப்பட்டுதான் சிம்பு அடுத்தடுத்து வேறு படங்களில் நடிக்க துவங்கினார். இப்போது ‘கெட்டவன்’ கதையை சிம்புவுடன் வேறு நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் சிம்புவன் தந்தை டி.ராஜேந்தர். ஆனால் இதுகுறித்து எந்த அதிகார்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#Kettavan #AnbanavanAsaradhavanAdangadhava #Namitha #LekhaWashington #Santhanam #TRajendar #STR

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்


;