‘ஸ்பைடரு’க்கு தமிழில் சொந்த குரல் கொடுக்கும் மகேஷ் பாபு?

தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ படத்தில் சொந்த குரலில் பேசும் மகேஷ் பாபு!

செய்திகள் 1-Jul-2017 12:52 PM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘ஸ்பைடர்’ படத்தின் அனைத்து வசன காட்சிகளின் படப்பிடிப்பும் முடிந்து விட்டதாம்! இன்னும் இரண்டு பாடல்களை படமாக்கி விட்டால் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து விடுமாம். ‘ஸ்பைடர்’ தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடி படமாக உருவாகி வருகிறது. தமிழில் வெளியாகும் ‘ஸ்பைடரு’க்கும் மகேஷ் பாபுவே டப்பிங் பேச இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 29-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி முதலானோரும் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

#MaheshBabu #RakulPreetSingh #ARMurugadoss #Spyder #SJSuryah #Bharath #HarrisJayaraj #SanthoshSivan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மான்ஸ்டர் - டீஸர்


;