விக்ரமின் ‘துருவ நட்சத்திர’த்தில் 5 பிரபலங்கள்!

‘துருவ நட்சத்திரம்’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்றால் படம் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது

செய்திகள் 29-Jun-2017 10:50 AM IST Chandru கருத்துக்கள்

பல வருடங்களுக்கு முன்பு கௌதம் வாசுதேவ் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கான ஸ்கிரிப்டை எழுதி முடித்து அது பலவித மாற்றங்களுக்குப் பிறகு, பல ஹீரோக்கள் வசம் சென்று தற்போது விகரமை நாயகனாக்கி உருவாக்கப்பட்டு வருகிறது. விக்ரமிற்கு இணையான ரோல் ஒன்றில் படத்தில் நடிகர் பார்த்திபனும் நடிக்கிறார். அதோடு, படத்தின் நாயகியாக தெலுங்கு ‘பெல்லி சோப்புலு’ புகழ் ரீது வர்மாவும், ஐஸ்வர்யா ராஜேஷும் நடிப்பது உறுதியாகி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் லேட்டஸ்ட்டாக ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ராதிகா சரத்குமார், சிம்ரன் ஆகியோரும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்களாம். ஹீரோ விக்ரமை தவிர்த்து பார்த்திபன், ரீதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சிம்ரன் என 5 பிரபலங்களோடு உருவாகிவரும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

#GauthamVasudevMenon #DhruvaNatchathiram #Parthiepan #RituVarma #AishwaryaRajesh #Vikram #Simran #RadhikaSarathkumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லட்சுமி ட்ரைலர்


;