வெங்கட் பிரபு வழங்கும் ‘பார்ட்டி’

டி.சிவா தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கும் படம் ‘பார்ட்டி’

செய்திகள் 24-Jun-2017 10:57 AM IST VRC கருத்துக்கள்

‘சென்னை-600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் படத்திற்கு ‘பார்ட்டி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கிய ‘சரோஜா’ படத்தை தயாரித்த ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், ‘மிர்ச்சி’ சிவா, கயல் சந்திரன், ரெஜினா கெசண்டரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெதுராஜ் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறது. வழக்கமாக வெங்கட் பிரபு இயக்கும் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பது வழக்கம்! ஆனால் ‘பார்ட்டி’க்கு வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமன் இசை அமைக்கிறார். வெங்கட் பிரபு இயக்கிய எல்லா படங்களிலும் பிரேம்ஜி அமரன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் இந்த படத்தில் பிரேம்ஜி அமரன் இசை அமைப்பதோடு சரி, நடிக்கவில்லை! வெங்கட் பிரபு இயக்கத்தில் சத்யராஜ் இது வரை நடித்ததில்லை. சத்யராஜும், வெங்கட் பிரபுவும் முதன் முதலாக இணையும் இந்த படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க ஃபிஜியில் நடைபெறவிருக்கிறது. சென்னையில் நேற்று மாலை நடந்த டி.சிவாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ‘பார்ட்டி’யின் அதிகாரபூர்வ அறிவிப்பு நடைபெற்றது. வெங்கட் பிரபு தயாரிப்பில் ‘ஆர்.கே.நகர்’ என்ற ஒரு படம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.#VenkatPrabhu #Party #Sathyaraj #AmmaCreations #Jayaram #Jai #Sampath #Chandran #ReginaCassandra #PremgiAmaran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கனா டீஸர்


;