ரிலீஸ் தேதி குறித்த ‘நிபுணன்’ அர்ஜுன்!

அருண்வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜுன் நடிக்கும் ‘நிபுணன்’ ஜூலை 7-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 22-Jun-2017 12:56 PM IST Top 10 கருத்துக்கள்

அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜுன், வரலட்சுமி, பிரசன்னா, ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி மணிரத்னம் முதலானோர் நடிக்கும் ‘நிபுணன்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அர்ஜுன் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. நேற்று சென்னையில் பி.வி.ஆர். திரையரங்க திறப்பு விழாவும் ‘நிபுணன்’ டிரைலர் வெளியீட்டும் ஒரே இடத்தில் நடைபெற்றது. அப்போது அர்ஜுன் பேசும்போது ‘நிபுணன்’ படத்தை அடுத்த மாதம் (ஜூலை) 7-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக கூறினார். ‘நிபுணன்’ படத்தில் நடித்துக் கொண்டே அர்ஜுன் தனது மகல் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிப்பில் ‘சொல்லிவிடவா’ என்ற படத்தை இயக்கி தயாரித்தும் வருகிறார். ‘பட்டத்து யானை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் இரண்டாவது படம் ‘சொல்லி விடவா’ என்பது குறிப்பிடத்தக்கது.

#Nibunan #Arjun #Varalaxmi #PVRCinemaHall #Pallavaram #Prasanna #SruthiHariharan #Suman #Suhasini #ArunVaidyanathan.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காட்டேரி ட்ரைலர்


;