விஜய்சேதுபதியை தொடர்ந்து விஷாலுடன் இணையும் டி.ராஜேந்தர்!

விஜய்சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்த டி.ராஜேந்தர், அடுத்து விஷாலுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்!

செய்திகள் 20-Jun-2017 12:41 PM IST VRC கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கவண்’ படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்த டி.ராஜேந்தர் அடுத்து பேரரசு இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் விஷாலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. ‘வீரசாமி’ படத்துக்கு பின் டி.ராஜேந்தர் ‘ஒருதலை காதல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் வேலைகள் ஒரு பக்கம் நடந்து வர, முக்கியமான கேரக்டர் என்றால் வேறு இயக்குனர்கள் இயக்கும் படங்களிலும் டி.ராஜேந்தர் நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் விஜய்சேதுபதியை தொடர்ந்து இப்போது விஷாலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் டி.ராஜேந்தர்! இந்த படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TRajender #Kavan #VijaySethupathi #Perarasu #KVAnand #Vishal #OruThalaiKadhal #Sivakasi #Thirupachi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அய்யா உருவான விதம் - சீதக்காதி


;