‘காலா’வில் சிவாஜிராவ் கெய்க்வாட்!

ரஜினியின் ‘காலா’வில் ரஜினி நிஜ பெயரில் நடிக்கும் அரவிந்த் ஆகாஷ்!

செய்திகள் 17-Jun-2017 10:43 AM IST VRC கருத்துக்கள்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ’காலா’ படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் நானா படேகர், சமுத்திரகனி முதலானோர் நடிக்க அரவிந்த் ஆகாஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் மகாராஷ்டரா போலீஸாக நடிக்கும் அரவிந்த் ஆகாஷின் கேரக்டர் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்! இது ரஜினிகாந்தின் நிஜ பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபு இயக்கிய ’கோவா’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பா.ரஞ்சித். வெங்கட் பிரபு இயக்கிய சில படங்களில் நடித்த அரவிந்த் ஆகாஷ் இப்போது, வெங்கட் பிரபுவின் சிஷ்யர் பா.ரஞ்சித் இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.

#Kaala #Rajinikanth #Kabali #PaRanjith, Aravind Akash, Samuthirakani, Santhosh Narayanan, Venkat Prabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேட்ட ட்ரைலர்


;