எந்தப் படமும் செய்யாத சாதனையை செய்த ‘பாகுபலி 2’?

வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ‘பாகுபலி 2’ வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

செய்திகள் 16-Jun-2017 1:12 PM IST Chandru கருத்துக்கள்

ஹிந்தி சினிமாவில் முதல்முறையாக 500 கோடி வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை ஒரு தென்னிந்தியா சினிமாவாக ‘பாகுபலி 2’ படைத்ததில் தெலுங்கு சினிமா ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ‘பாகுபலி 2’ திரைப்படம் மேலும் ஒரு பிரம்மாண்டமான சாதனையைப் படைத்திருக்கிறது. ஏப்ரல் 28ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான ‘பாகுபலி 2’ 50 நாட்கள் ஓடி புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

50 நாட்களைக் கடந்து ஓடுவதில் என்ன சாதனை இருக்கிறது? என கேட்பவர்களுக்காக ஒரு தகவல்... வெறும் ஒன்றிரண்டு தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடவில்லை.... உலகளவில் 1050க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘பாகுபலி 2’ திரைப்படம் 50 நாட்களை எட்டியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு படம் ஒரு வாரம், 25 நாட்கள் ஓடுவென்பதே இப்போதெல்லாம் பெரிய சாதனைதான். அப்படியே ஏதாவது ஒன்றிரண்டு படங்கள் 50 நாட்களைக் கடந்தாலும், அவை 10க்கும் குறைவான திரையரங்குகளிலேயே அந்த மைல்கல்லை எட்டியிருக்கும். ஆனால், ‘பாகுபலி 2’ இந்த விஷயத்தில் மலைக்க வைக்கும் சாதனையைப் படைத்திருக்கிறது. சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கத்தில் ‘பாகுபலி’ முதல் பாகத்திற்குப் பிறகு 50 நாட்களைக் கடந்த படம் ‘பாகுபலி 2’ மட்டுமே என அதன் உரிமையாளரே குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால், நீங்களே கூட்டிக் கழித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.... ‘பாகுபலி 2’வின் சாதனை எப்படிப்பட்டது என்பதை..!

#Baahubali2 #Baahubali #Prabhas #RanaDaggubati #Naaser #Anushka #Tamannah #SSRajamouli #Keeravani #ArkaMediaWorks

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் ஆணையிட்டால் - டிரைலர்


;