அதர்வாவை இயக்கும் ‘டார்லிங்’ இயக்குனர்!

‘ஈட்டி’ படத்தை தொடர்ந்து மீண்டும் மைகேல் ராயப்பன் தயாரிப்பில் அதர்வா!

செய்திகள் 14-Jun-2017 11:02 AM IST VRC கருத்துக்கள்

அதர்வா நடிப்பில் ‘ஈட்டி’ படத்தை தயாரித்த ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் மீண்டும் அதர்வா நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞ்ரகளின் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘AAA’, ஜீவா, நிக்கி கல்ராணி இணைந்து நடிக்கும் ‘கீ’ ஆகிய படங்களின் தயாரிப்பில் இருந்து வரும் மைக்கேல் ராயப்பனின் 10-ஆவது தயாரிப்பு ‘கீ’ என்பது குறிப்பிடத்தக்கது. ஈட்டியை தொடர்ந்து அதர்வா நடிக்கும் இந்த படம் 11-ஆவது படமாகும். இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

#Atharvaa #Eetti #Darling #SamAnton #EnakkuInnoruPerIrukku #GlobalInfotainment #AAA #Kee

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூர்கா ட்ரைலர்


;