ஆணவக்கொலை பின்னணியில் உருவாகும் படம்!

ஆணவக்கொலை பின்னணியில் ஒரு கபடி வீரனின் கதையாக உருவாகும் படம் ‘அருவா சண்டை’

செய்திகள் 7-Jun-2017 4:24 PM IST VRC கருத்துக்கள்

‘சிலந்தி’ ‘ரணதந்த்ரா’ (கன்னடம்) ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்கும் படம் ‘அருவா சண்டை’. ’இந்த படம் தென் மாவட்டங்களில் நடந்து வரும் ஆணவக் கொலைகளின் பின்னணியில் ஒரு கபடி வீரனின் கரடு முரடான காதல் கதையை சொல்லும் படம்’ என்கிறார் இந்த படத்தை இயக்கும் ஆதிராஜன். இந்த படத்தில் கதையின் நாயகனாக ராஜா நடிக்கிறார். இவர் திருநெல்வேலியை சேர்ந்த கபடி விளையாட்டு வீரர். கதாநாயகி தேர்வு நடந்து வரும் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து, நெல்லை சிவா, பிளாக் பாண்டி முதலானோர் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்திற்கு தரண் இசை அமைக்கிறார். தரண் இசை அமைக்கும் 25-வது படம் இது! சில கன்னட படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற சாபு ஜோசஃப் படத்தொகுப்பு செய்கிறார். ‘ஒயிட் ஸ்கிரீன் புரொடக்‌ஷன்’ நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்குகிறது.

#AruvaSandai #Silandhi #Aadhirajan #Raja #Ponvannan #AadukalamNarien #KanjaKaruppu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;