‘வில்லனு’க்காக கொச்சியில் முகாமிட்டுள்ள விஷால், ஹன்சிகா!

மோகன்லாலின் வில்லனுக்காக கொச்சிக்குச் சென்ற விஷால், ஹன்சிகா!

செய்திகள் 7-Jun-2017 1:05 PM IST VRC கருத்துக்கள்

மோகன்லால் நடித்து வரும் மலையாள படம் ‘வில்லன்’. பல வெற்றிப் படங்களை வழங்கிய பி.உன்னிகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தில் மோகன்லாலுடன் விஷால், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவலை ஒரு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். மிகுந்த பொருட் செலவில் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தை தமிழில் ‘லிங்கா’ மற்றும் பல கன்னட படங்களை தயாரித்த ‘ராக்லைன்’ வெங்கடேஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இந்த படம் ‘8K’ தொழில்நுட்பத்தில் படம் பிடிக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் எடுக்கப்படும் முதல் படம் நயன்தாரா நடிப்பில் தமிழில் உருவாகி வரும் ‘கொலையுதிர்காலம்’ என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது படம் மோகன்லாலின் ‘வில்லன்’.

’வில்லனு’க்காக கொச்சியில் மிகப் பிரம்மாண்ட செட் அமைத்து காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இந்த படப்பில் தற்போது விஷால், ஹன்சிகா முதலானோர் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள்! இந்த படத்தில் மோகன்லால் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய பாத்திரங்களில் விஷால், ஹன்சிகா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ராஷிகன்னா ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை மோகன்லாலின் ‘புலிமுருகன்’ படத்தில் பணியாற்றிய பீட்டர் ஹெய்ன் அமைத்து வருகிறார். ஒரு சில சண்டை காட்சிகளை ‘ஸ்டன்ட்’ சில்வாவும் அமைக்கிறார்.

#Vishal #Hansik #MohanLal #Villain #Punnikrishnan #RocklineVenkatesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை ட்ரைலர்


;