‘வட சென்னை’யில் தனுஷுடன் இணையும் அமீர்!

வெற்றிமாறன் இயக்கும் தனுஷின்  ‘வட சென்னை’யில் விஜய்சேதுபதிக்கு பதிலாக அமீர் நடிக்கிறார்!

செய்திகள் 1-Jun-2017 10:39 AM IST VRC கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கி வரும் ‘வட சென்னை’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இப்போது இந்த படத்திலிருந்து கால்ஷீட் பிரச்சனை காரணமாக விஜய்சேதுபதி விலகிவிட்டார் என்றும், அவருக்கு பதிலாக இயக்குனர் அமீர் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ‘வட சென்னை’ படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் தனுஷ் தற்போது தான் நடிக்கும் ஆங்கில படத்தின் படப்பிடிப்பிற்காக பெல்ஜியம் சென்றுள்ளார்! அந்த படப்பிடிப்பு முடிந்ததும் தனுஷ் ‘வட சென்னை’யில் இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது.

#Ameer #VadaChennai #Vetrimaran #Dhanush #Aadukalam #Polladhavan #WunderbarFilms #SeanRolden #VijaySethupathi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ


;