‘புலி முருகன்’ படத்தை தொடர்ந்து சிம்புவின் ‘AAA’

வியாபரம் சூடு பிடித்த சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’

செய்திகள் 30-May-2017 12:32 PM IST VRC கருத்துக்கள்

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலிமுருகன்’ திரைப்படம் ஜூன் 16-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ’3டி’யிலும் வெளியாகும் இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘செந்தூர் சினிமாஸ்’ நிறுவனம் பெரிய தொகைகு கைபற்றியுள்ளது என்ற தகவலை ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இப்போது ‘புலிமுருகன்’ படத்தை தொடர்ந்து சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் திருச்சி ஏரியா விநியோக உரிமையையும் இதே நிறுவனம் கைபற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ’அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகவிருக்கும் படம், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் என்ற சிறப்புக்களுடன் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படத்தின் சென்னை விநியோக உரிமையை ஜாஸ் சினிமாஸும், மதுரை ஏரியா விநியோக உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸும் கைபற்றியுள்ளதாம். வியாபார விஷயங்கள் சூடு பிடித்துள்ள சிம்புவின் ‘AAA’ ரம்ஜானையொட்டி ஜூன் 23-ஆம் தேதி வெளியாகிறது.

#AAA #STR #AdhikRavichandran #Pulimurugan #SendhoorCinemas #MohanLal #Shriya #YuvanShankarRaja #Tamannah #NeetuChandra #SanaKhan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செக்க சிவந்த வானம் ட்ரைலர்


;