‘சுவாதி கொலை வழக்கை’ புலனாய்வு செய்யும் போலீஸ் அதிகாரியாக அஜ்மல்!

எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில், அஜ்மல் நடிப்பில்  திரைப்படமாகும் ‘சுவாதி கொலை வழக்கு’

செய்திகள் 30-May-2017 10:43 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பின்னணியாக வைத்து எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியுள்ள படம் ‘சுவாதி கொலை வழக்கு’. இந்த படத்தில் சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக அஜ்மல் நடிக்கிறார். கொலை செய்யப்பட்ட சுவாதி பாத்திரத்தில் ஆயிரா நடிக்கிறார். மனோ என்ற புதுமுகம் ராம்குமாராகவும், ஏ.வெங்கடேஷ் ராம்ராஜ் என்ற வக்கீல் வேடத்திலும், ‘பென்ஸ் கிளப்’ சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் திரைக்கதை வசனத்தை ஆர்.பி.ரவி எழுதியுள்ளார்.

‘உளவுத்துறை’, ‘ஜனனம்’, வஜ்ரம்’ முதலான படங்களை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் ‘சுவாதி கொலை வழக்கு’ படம் குறித்து பேசும்போது, ‘’நிஜ சம்பவங்களை படமாக்கும்போது சுவாரஸ்யத்திற்காகவும் பரபரப்புக்காகவும் கற்பனையாக சில காட்சிகளை சேர்ப்பதுண்டு. ஆனால் சுவாதி கொலை வழக்கு படத்தில் அப்படி எந்த காட்சிகளும் சேர்க்கப்பட்வில்லை. நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறோம். பரபரப்பான சம்பவங்கள் இந்த படத்தின் சிறப்பம்சம். மக்களுக்கு தெரிவிக்கப்படாத நிறைய சம்பவங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த காட்சிகளை திரையில் பார்க்கும்போது திடுக்கிட்டுப் போகும்’’ என்றார்.

‘ஜெயசுபஸ்ரீ புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜோன்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷாம் டி.ராஜ் இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை ஜெய்சங்கர் கவனிக்க, படத்தொகுப்பை மாரி கவனிக்கிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஷால், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் கதிரேசன் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு திரைப்பட துறையிலுள்ள பிரச்சனைகள் குறித்தும், அந்த பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படுவது குறித்தும் பேசினார்கள்.

#SwathiKolaiValakku #Ajmal #Aayira #SDRameshSelvan #SKSubbaiah #Maari

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;