ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி இயக்கத்தில் பியா நடிக்கும் படம்!

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் கேரக்டரில் பியா!

செய்திகள் 24-May-2017 11:01 AM IST VRC கருத்துக்கள்

‘சின்ன வீடு’, ‘சிறை பறவை’, ‘தெற்கத்தி கள்ளன்’, ‘தெற்கு தெரு மச்சான்’ உட்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் பி.ஆர்.விஜயலட்சுமி. ப டிவி தொடர்களிலும் பணியாற்றியிருக்கும் இவர் சத்தமில்லாமல் ஒரு தமிழ் படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடத்தி வரும் இந்த படத்தில் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகரான டோவினோ ஜேக்கப் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பியா பாஜ்பாய் நடிக்கிறார். நெருங்கி வா முத்தமிடாதே படத்திற்கு பிறகு பியா தமிழில் நடிக்கும் படம் இது. டோவினோ, பியாவுடன் இப்படத்தில் பிரபு, சுஹாசினி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு கேரளாவிலுள்ள வாகமண், சால்க்குடி போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. இந்த படத்தில் டோவினோ ஜேக்கப் சாஃப்ட்வேர் எஞினீயராக நடிக்க பியா, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான அதாவது இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் ஒரு பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறாராம். இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

#CameramanVijayalakshmi #PiaaBajpai #ChinnaVeedu #SiraiParavai #TherkuTheruMachan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருங்கி வா முத்தமிடாதே - டிரைலர்


;