சுந்தர்.சியின் ‘சங்கமித்ரா’வில் கே.வி.ஆனந்தின் ஆஸ்தான கதாசிரியர்கள்!

பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படம் குறித்த புதிய தகவல்

செய்திகள் 23-May-2017 10:56 AM IST Chandru கருத்துக்கள்

கான்ஸ் திரைப்பட விழா ரெட் கார்பெட் நிகழ்வில் பங்கேற்றதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றிருக்கிறது சுந்தர்.சியின் ‘சங்கமித்ரா’. ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு, அதைவிட பிரம்மாண்டமாக உருவாகவிருப்பதாகக் கூறப்படும் ‘சங்கமித்ரா’வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்தான் தற்போது இணையதளங்களில் வைரல் ஹிட்டாகியுள்ளது. ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் கலை இயக்கப் பணிகளை கவனிக்கிறார் சாபு சிரில். ஒளிப்பதிவை திரு மேற்கொள்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் கதாசிரியர்களாக இரட்டை எழுத்தாளர்கள் சுபா நியமியக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘கவண்’ உட்பட கே.வி.ஆனந்தின் பெரும்பாலான படங்களுக்கு கதாசிரியர்களாக இவர்கள்தான் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷங்கரின் ‘ஐ’ படத்திற்கான வசனங்களை இவர்களே எழுதியுள்ளனர்.

#Sangamithra #SundarC #Arya #JayamRavi #ShrutiHaasan #ARRahman #Subha #SriThenandalFilms #KVAnand

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தமிழ் படம் 2 டீஸர்


;