‘ரேனிகுண்டா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் சக்தி. இந்த படத்தை தொடர்ந்து ‘வாலு’, ‘இவன் வேற மாதிரி’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ முதலான தமிழ் படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சக்தி. ‘குரு’ என்ற தெலுங்கு படத்திலும் பணிபுரிந்துள்ளார். விஜய்சேதுபதி நடிக்கும் ‘கருப்பன்’ படத்திற்கு இவர் தான் ஒளிப்பதிவாளர். ‘கருப்பன்’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் சமீபத்தில் முடிந்துவிட்ட நிலையில் சக்தி அடுத்து லிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடிக்கும் ‘சண்டைக்கோழி-2’வில் ஒளிப்பதிவாளராக பணியாற்றவிருக்கிறார். இந்த தகவலை சக்தி சென்ற 14ஆம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி-2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறதாம்.
#Lingusamy #Vishal #Sandakozhi2 #KeerthySuresh #Renigunta #YuvanShankarRaja #Vaalu #IvanVeraMaathiri #IrudhiSuttru
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
‘மைதான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரியாக இருந்த கீர்த்தி சுரேஷிற்கு கடைசி நேரத்தில் அந்த...