சிம்புவுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்குமார்!

‘AAA’ படத்தில் சிம்புவுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ் குமார்!

செய்திகள் 13-May-2017 3:09 PM IST VRC கருத்துக்கள்

சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. இதில் முதல் பாகத்தை ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அடுத்த (ஜூன்) மாதம் 23ஆம் தேதி வெளியிடவிருப்பதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்புவுடன் ஜி.வி.பிரகாஷ் குமாரும் இணைந்துள்ளார். ஆனால் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் சிம்புவுடன் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? இல்லை பாடல் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சிம்புவுடன் கை கோர்த்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. சிம்புவும், ஜி.வி.பிரகாஷும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பிலும் இது குறித்த எந்த விளக்கமும் தரவில்லை! இது குறித்த விளக்கம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்!

#GVPrakash #STR #AnbanavanAsaradhavanAdangadhavan #GVPrakash #Simbu #AdhikRavichandran #Yuvan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;