தாயார் மூலம் இயக்குனர் சீனுராமசாமியை கௌரவித்த விஜய்சேதுபதி!

‘உலகாயுதா’ விழாவில் இயக்குனர் சீனுராமசாமியை கௌரவித்த விஜய்சேதுபதி தாயார்!

செய்திகள் 3-May-2017 11:22 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் ‘உலகாயுதா’ அமைப்பு சார்பில் தமிழ் தேசிய சலனப்படம் 100-ஆவது ஆண்டு விழா மற்றும் 100 மூத்த சினிமா கலைஞர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில், தொழிலாளர் தினமான மே-1ஆம் தேதி நடைபெற்றது. இதில் 100 கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட 100 தங்கப் பதக்கங்களின் மொத்த செலவையும் நடிகர் விஜய்சேதுபதி ஏற்றுக்கொண்டார். முதல் தங்கப் பதக்கத்தை தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனுராமசாமிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை விஜய்சேதுபதி, தனது தாயார் சரஸ்வதி மூலமாக சீனுராமசாமிக்கு வழங்கி கௌரவப்படுத்தினார். விஜய்சேதுபதியின் தாயார் சரஸ்வதி அம்மையார் ஒரு சினிமா விழாவில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறையாம்!

இந்த விழாவில் விஜய்சேதுபதி பேசும்போது, ‘‘நான் பெரிதாக எதையும் கொடுத்து விடவில்லை. சினிமா எனக்கு கொடுத்ததில் இருந்து சிறிது எடுத்து சினிமாவில் இருக்கிறவர்களுக்கு கொடுத்திருக்கிறேன். அவ்வளவு தான்! சினிமா தான் என்னை அங்கீகரித்தது. ஒரு ஹீரோவாக நான் நடித்த முதல் படத்திலேயே சினிமா தொழிலாளர்கள் கொடுத்த மரியாதை என்னை நெகிழ வைத்துவிட்டது. இதுபோன்ற விழா ஆண்டுதோறும் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’’ என்றார். இவ்விழாவில் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

#Ulagayutha #VijaySethupathi #SeenuRamasamy #Saraswathi #EditorMohan #Vasanth #Cheran #SPJananathan #PCSriram

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96


;