‘திருட்டு விசிடி’ தயாரிக்க உதவுவோரை பிடித்து கொண்டுத்தால் 1 லட்சம் பரிசு!

திருட்டு விசிடி தயாரிப்பில் ஈடுபடுவோரை பிடித்து கொடுப்பவருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு!  - ‘விளையாட்டு ஆரம்பம்’ விழாவில் விஷால் அறிவிப்பு!

செய்திகள் 22-Apr-2017 11:28 AM IST VRC கருத்துக்கள்

‘மேக் 5 ஸ்டுடியோஸ்’ நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘விளையாட்டு ஆரம்பம்’. விஜர் ஆர்.ஆனந்த், ஏ.ஆர்.சூரியன் இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்ராவியா நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் பாலா, ‘கலைப்புலி’ எஸ்.தாணு, நடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான விஷால், ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல்ராஜா, இயக்குனர்கள் ஆர்,வி.உதயகுமார், பேரரசு, ‘சாட்டை’ அன்பழகன், நடிகர் மன்சூரலிகான், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, ‘‘எனக்கு கடுமையான காய்ச்சல் அடிக்கிறது., ஆனால் ஆஸ்பத்திரி போவதாக சொல்லி விட்டு இந்த விழாவிற்கு வந்தேன். பெரோஸ்கான் மகன் யுவன் ஹீரோவாக நடிக்கிறார். ஒரு அப்பாவிற்கு தன் மகன் பெரிய ஹீரோவாவது ரொம்பப் பிடிக்கும். எங்க அப்பாவும் என்னை அப்படித்தான் வளர்த்தார். அதனால் தான் இந்த விழாவிற்கு வந்தேன்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறோம். தியேட்டரில் படம் ஓடும்போது அதை கேமரா வைத்து காப்பி செய்து, திருட்டு விசிடி, பைரசி தயாரிக்க உதவுவோரை பிடித்து தியேட்டர் நிர்வாகிகளிடம் ஒப்படைத்து போலீஸில் எஃப்.ஐ.ஆர்.போட உதவுபவருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளால் திருட்டு விசிடி தயாரிப்பு கட்டுப்படுத்தப்படும் என்று கூறினார் விஷால்.

#Vishal #VilaiyaatuAarambam #Mak5Studios #ARSooriyan #Yuvan #RVUdhayakumar #SrikanthDeva #Bala #KalaipuliSthanu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;