பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் லுக், தீபாவளிக்கு ரிலீஸ் : ‘விஜய் 61’ அதிகாரபூர்வ அப்டேட்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ புதிய தகவல்கள்!

செய்திகள் 22-Apr-2017 10:31 AM IST Chandru கருத்துக்கள்

‘தெறி’ கூட்டணியின் அடுத்த படைப்பான ‘விஜய் 61’ படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் படத்தில் நடிப்பதால் விஜய்க்கு மூன்று வேடங்கள் என்ற தகவலும் கசிந்துள்ளது. அதோடு, தாடி மீசையில் ஒரு கெட்அப், கிராமத்துக்காரராக மற்றொரு கெட்அப், இதுதவிர இளமைத்தோற்றத்தில் ஒரு கெட்அப் என மூன்று கெட்அப்களிலும் விஜய் இப்படத்தில் தோன்றவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த அதிகாரபூர்வ புதிய தகவல்களை நேற்று வெளியிட்டது தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம்.

இந்நிறுவனத்தின் 100வது படைப்பாக உருவாகிவரும் ‘விஜய் 61’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் பிறந்தநாள் (ஜூன் 22) அன்று வெளியிடவிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகிவரும் பாடல்களை ஆகஸ்ட் மாதத்திலும், படத்தை அக்டோபரிலும் ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்கள். இதனால் இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Vijay61 #Vijay #Atlee #Samantha #KajalAgarwal #ARRahman #SriThenandalFilms #Theri #NithyaMenen

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;