‘மாயா’வை தொடர்ந்து இறவாக்காலம்!

‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்து இயக்கும்  படம்  ‘இறவாக்காலம்’

செய்திகள் 15-Apr-2017 9:53 AM IST VRC கருத்துக்கள்

நயன்தாரா நடிப்பில் ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து மிகப் பெரிய வெற்றி அடைந்த படம் ’மாயா’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அஸ்வின் சரவணன் தனது இரண்டாவது படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இருந்து வந்தார். இப்போது அந்த வேலைகள் முடிவடைந்துவிட்ட நிலையில் தனது இரண்டாவது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அஸ்வின் சரவணன்! தனது இரண்டாவது படமாக இயக்கவிருக்கும் படத்திற்கு வித்தியாசமாக ‘இறவாக்காலம்’ என்று டைட்டில் வைத்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா காபி முதலானோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ‘மாயா’ படத்திற்கு இசை அமைத்த ரான் எதன் யோஹான் இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். படப்பிடிப்பு துவங்கி விட்ட இந்த படத்தை டி.எஸ்.எல். நிறுவனம் சார்பில் என்.முரளி ராமசாமி தயாரிக்கிறார்.

#Maya #Nayanthara #AshwinSaravanan #PotentialStudios #Iravaakaalam #SJSuriya #Sshvidha #RonyathanYogan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;