’மாநகரம்’ படத்தை தொடர்ந்து சந்தீப் கிஷனின் ‘மாயவன்’

சி.வி.குமாரின் ‘மாயவன்’ படப் பாடல்கள் 17-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 12-Apr-2017 12:30 PM IST VRC கருத்துக்கள்

பல வெற்றிப் படங்களை தயரித்து வழங்கிய சி.வி.குமார் இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கியுள்ள படம் ‘மாயவன்’. சந்தீப் கிஷன், லவண்யா த்ரிபாதி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இப்படம் வித்தியாசமான ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரி ஒருவர் பின்னணியில் நடக்கும் வித்தியாசமான சம்பவங்களை கொண்ட கதையாம் ‘மாயவன்’. இந்த படத்தின் பாடல்களை வருகிற 17-ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள். ‘மாநகரம்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியாகவுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃபும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை கோபி அமர்நாத் கவனித்துள்ளார். சி.வி.குமார், கே.ஈ.ஞானவேல் ராஜா, அபினேஷ் இளங்கோவன் முதலானோர் இணைந்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது!

#Mayavan #CVKumar #SundeepKishan #LavanyaTripathi #JackieShroff #IndruNetruNaalai #Suriya #24Movie

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கண்ணாடி ட்ரைலர்


;