‘‘தேசிய விருது ஊக்கம் தந்துள்ளது!’’ - சூர்யா நெகிழ்ச்சி

64வது தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில் ‘24’ திரைப்படம் இடம்பிடித்துள்ளது குறித்து நடிகர் சூர்யா வீடியோ பேச்சு

செய்திகள் 8-Apr-2017 10:58 AM IST Chandru கருத்துக்கள்

64வது தேசிய திரைப்பட விருதுப்பட்டியலில் கோலிவுட்டிற்கு மொத்தம் 6 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த மாநில மொழித் திரைப்படமாக தமிழில் ‘ஜோக்கர்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற ‘ஜாஸ்மின்...’ பாடலைப் பாடிய சுந்தர் ஐயருக்கு சிறந்த பாடகர் விருதும், ‘தர்மதுரை’ படத்திற்கு பாட்டெழுதிய வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான விருதும், தனஞ்செயனுக்கு சிறந்த திரைத்துறை எழுத்தாளருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘24’ திரைப்படத்திற்கும் இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த சந்தோஷத்தை வீடியோ பேச்சு மூலம் வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யா. இதுகுறித்து அந்த வீடியோவில் நடிகர் சூர்யா....

‘‘தேசிய விருது வென்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்! ஒட்டுமொத்த '24' குழுவினரும் தேசிய விருது அறிவிப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறோம். ஒளிப்பதிவாளர் திரு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர்களான அமித் மற்றும் சுப்ரோ ஆகியோரின் பணிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. தேசிய விருது குழுவினர் அனைவருக்கும் எங்களுடைய படக்குழுவினரின் சார்பாக நன்றி.

ஏ.ஆர்.ரஹ்மான் சார் சொன்னது போல ‘24’ எங்களுக்கு ஒரு முக்கியமான படம். அதை முடிப்பதில் எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தது. அவர்களுடைய முந்தைய படங்களுக்கும் சேர்த்துக் கிடைத்த ஒரு மரியாதையாகத்தான் பார்க்கிறோம். மனதுக்குப் பிடித்த ஒரு படத்துக்கு தேசியளவில் அங்கீகாரம் கிடைக்கும்போது ரொம்ப ஊக்குவிப்பாக இருக்கிறது. இதுபோன்ற மனது நெருக்கமான படங்களுக்கு செய்வதற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது. உங்கள் அனைவருடைய அன்புக்கும் நன்றி!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
#Suriya #24Movie #Joker #Thiru #Dhanajeyan #SRPrabhu #2DEntertainment #Samantha #RajuMurugan #VikramKumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;