இறுதிகட்ட பணிகளில் ‘ராஜா ரங்குஸ்கி’

தரணீதரன் இயக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’யின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டது!

செய்திகள் 7-Apr-2017 11:28 AM IST VRC கருத்துக்கள்

’பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ படங்கள் புகழ் தரணிதரன் இயக்கி வந்த படம் ‘ராஜா ரங்குஸ்கி. ‘மெட்ரோ’ படப் புகழ் ஷிரிஷ், சாந்தினி தமிழரசன் ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் ஷிரிஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். க்ரைம் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இதனை தொடர்ந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிசியாகியுள்ள படக்குழுவினர் இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாக்கள் விரைவில் நடைபெறவிருக்கிறது. ‘மெட்ரோ’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஷிரிஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படம் மீது ஒருவித எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

#RajaRanguski #Shirish #YuvanShankarRaja #Chandini #DharaniDharan #Metro

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீ யாழினி வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி


;