பி.வாசு, ராஜ்கிரண் - 26 வருடங்களுக்கு பிறகு நிகழ்ந்த மேஜிக்!

’என் ராசாவின் மனசிலே’, ‘சின்ன தம்பி’யை போல் சிவலிங்கா’, பவர் பாண்டி!

செய்திகள் 4-Apr-2017 11:34 AM IST VRC கருத்துக்கள்

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘சிவலிங்கா’. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற 14-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுக்க ‘ACROSS FILMS’ நிறுவனம் வெளியிடுகிறது. பி.வாசு இயக்கத்தில் ராகாவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, சாரா தேவ், சக்தி வாசு, ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு டிரையின், அதில் நடக்கும் ஒரு கொலை, அந்த கொலையை பார்க்கும் ஒரு புறா… இதை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள ஒரு த்ரில்லர் படமாகும்.

கன்னட ரீ-மேக்காக உருவாகியுள்ள இந்த படம் ரிலீசாகும் அதே நாளில் தான் தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்துள்ள ‘பவர் பாண்டி’ படமும் திரைக்கு வருகிறது. இந்த இரண்டு படங்களின் ரிலீசிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாவது, கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜகிரண் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படம் 1991 ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி வெளியானது! அதைப் போல பி.வாசு இயக்கத்தில் பிரபு நடித்த ‘சின்ன தம்பி’ படமும் அதே வருட தமிழ் புத்தாண்டை ஒட்டி வெளியானது! இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றது! கிட்டத்தட்ட 26 வருடங்களுகு பிறகு இப்போது கஸ்தூரிராஜாவின் மகனான தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்துள்ள ‘பவர் பாண்டி’ படமும், பி.வாசு இயக்கத்தில் அவரது மகன் சக்தி நடித்துள்ள ’சிவலிங்கா’ படமும் ஒரே நாளில் வெளியாகிறது! ‘என் ராசாவின் மனசிலே’, ‘சின்ன தம்பி’ படங்களைப் போல இந்த வருட தமிழ் புத்தாண்டை ஒட்டி வெளியாகும் இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் எப்படிப்பட்ட வரவேற்பை கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

#PVasu #Rajkiran #PowerPaandi #Sivalinga #EnRasavinManasila #ChinnaThambi #Dhanush #WunderbarFilms #KasturiRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பவர் பாண்டி - சூரக்காத்து பாடல் வீடியோ


;