‘மாயா’ இயக்குனரின் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா?

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் படப்பிடிப்பு துவங்கியிருக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

செய்திகள் 30-Mar-2017 2:44 PM IST Chandru கருத்துக்கள்

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மாயா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் அஸ்வின் சரவணன் புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் நாயகனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதோடு, இப்படத்தில் ‘அதே கண்கள்’ படத்தின் நாயகி ஷிவதா நடிக்கிறார் எனவும் கூறப்பட்டது. தற்போது, இப்படத்தில் மேலும் ஒரு நாயகியாக ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் நடித்த வாமிகாவும் இணைந்துள்ளாராம்.

‘மாயா’ படத்திற்கு இசையமைத்த ரான் யோஹன்தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் தலைப்பு, ஒளிப்பதிவு செய்வது, தயாரிப்பது யார்? என்பனபோன்ற அதிகாரபூர்வ தகவல்கள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Nayanthara #Maya #AshwinSaravanan #SJSuryah #SshivadaNair #WamiqaGabbi #Selvaraghavan #MaalaiNerathuMayakkam #Selvaraghavan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;