கெளதம் மேனனின் அடுத்த பட ' First Look '

'பொன் ஒன்று கண்டேன்'  படம் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திகள் 29-Mar-2017 12:33 PM IST Top 10 கருத்துக்கள்

கெளதம் மேனன் தயாரிக்கும் தெலுங்கு 'PelliChoopulu' படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால், தமன்னா நடிப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தை கவுதம் மேனனின் உதவி இயக்குனரான செந்தில் வீராசாமி இயக்குகிறார். படத்தின் First look இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இப்படத்திற்கு 'பொன் ஒன்று கண்டேன்' எனும் தலைப்பு வைத்திருக்கிறார்கள். படக்குழு வெளியிட்ட Prelook போஸ்டரில் வினோத் - அம்பிகா எனும் பெயர்கள் இடம்பெற்றுருக்கிறது இதன் மூலம் படத்தில் விஷ்ணு, தமன்னாவின் பெயர்கள் இதுவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Guathammenon #OndragaEntertainment #VishnuVishal #Vinod #Ambika #PonnondruKanden #Pellichoopulu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;