நடிகர் சூரிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

நடிகர் சூரியின் தந்தை முத்துசாமி உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்

செய்திகள் 28-Mar-2017 10:53 AM IST Chandru கருத்துக்கள்

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சூரி. மதுரை மண்ணிலிருந்து கோலிவுட்டில் கால்பதித்த சூரி, தனது வெள்ளந்தியான காமெடி நடிப்பால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். இப்படை வெல்லும், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம், தொண்டன், வெண்ணிலா கபடி குழு 2 என ஒரே நேரத்தில் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சூரிக்கு நேற்றைய இரவு மிகுந்த சோகமாக அமைந்துவிட்டது.

நடிகர் சூரியின் தந்தை ஆர்.முத்துசாமி நேற்று இரவு 10.15 மணிக்கு இயற்கை எய்தியுள்ளார். 75 வயதாகும் முத்துசாமி நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம், தாமரைப்பட்டிக்கு அருகிலுள்ள ராசாக்கூரில் இன்று மாலை 4 மணியளவில் முத்துசாமிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தையை இழந்து வாடும் நடிகர் சூரிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ‘டாப் 10 சினிமா’ தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறது.

#Soori #Muthusamy #SaravananIrukkabayamen #Vedalam #MaplaSingam #Anjaan #Jilla

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;