அஜித் படத்தை தொடர்ந்து விஜய் படத்தில் பவன் கல்யாண்?

அஜித் நடித்த ‘வீரம்’ படத்தின் ரீ-மேக்கை தொடர்ந்து விஜய்யின் ‘தெறி’யை ரீ-மேக் செய்யும் பவன் கல்யாண்?

செய்திகள் 21-Mar-2017 12:43 PM IST VRC கருத்துக்கள்

அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘வீரம்’ தெலுங்கில் ‘கட்டமராயுடு’ என்ற பெயரில் ரீ-மேக் ஆகியுள்ளது. பவன் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் வருகிற 24-ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில், விஜய் நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘தெறி’ படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்து நடிக்கவும் பவன் கல்யாண் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ‘கட்டமராயுடு’ படத்தை தொடர்ந்து திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் ‘ PSPK23’ என்ற படத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ‘தெறி’ ரீ-மேக்கில் நடிக்க பவன் கல்யாண் திட்டமிட்டுள்ளாராம். இந்த படத்தை சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இயக்க இருக்கிறாராம். ஆனால் இது குறித்து இதுவரை எந்த அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#PawanKalyan #Ajith #Vijay #Kattamarayudu #Veeram #Theri

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;