ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் மூலம் மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தி வந்த ‘காற்று வெளியிடை’, படத்தின் டிரைலர் வெளியீட்டிற்குப் பின்பு அதை பன்மடங்காக்கியிருக்கிறது. ஏப்ரல் 7ஆம் தேதி வெளியீடு என்ற திட்டமிடலுடன் பரபரப்பாக இயங்கிவந்த ‘காற்று வெளியிடை’ டீம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது. படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், நேற்று சென்சார் அதிகாரிகளுக்கு படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படம் பார்த்தபிறகு படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கி, அனைத்து வயது ரசிகர்களும் படம் பார்ப்பதற்கு அனுமதி தந்துள்ளனர்.
கார்த்தி, அதிதி ராவ் நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ படத்தின் முழுமையான ஆல்பம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
#Maniratnam #KaatruVeliyidai #Karthi #AditiRaoHydari #MadrasTalkies #ARRahman #Saguni #Komban #Madras
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...