3 மொழிகளில் உருவாகி வரும் ஸ்ரீதேவியின் ‘மாம்’

ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகி வரும் ‘மாம்’ மூன்று மொழிகளில் வெளியாகிறது!

செய்திகள் 16-Mar-2017 10:34 AM IST VRC கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கிறது ஸ்ரீதேவி நடித்துள்ள ‘மாம்’ (அம்மா) என்ற திரைப்படம். ஒரு காலத்தில் தென்னிந்திய திரைப்பட உலகில் மட்டும் அல்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி! பாலிவுட் பிரபலம் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி ஒரு இடைவேளைக்கு பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடித்த ‘புலி’ படத்திலும் நடித்தார். இப்போது அவர் நடிப்பில் ஹிந்தியில் உருவாகி வரும் படம் ‘மாம்’. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ரவி உதயவார் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஸ்ரீதேவியுடன் அக்‌ஷய்கன்னா, நவாஸுதீன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி இணையதளத்தில் வெளியிட்டனர். இறுதிகட்ட வேலைகளில் இருந்து வரும் இப்படம் வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய ஸ்ரீதேவி சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#SriDevi #Mom #Puli #EnglishVinglish #RaviUdyawar #AkshayeKhanna #ARRahman #NawazuddinSiddiqui #MomMovie

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அசுரன் ட்ரைலர்


;