‘துருவநட்சத்திரம்’ படத்தில் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கௌதம் மேனன், விக்ரம் கூட்டணியில் இணையும் ஐஸ்வர்யா தனுஷ்!

செய்திகள் 13-Mar-2017 3:18 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன், விக்ரம் இருவரும் முதன் முதலாக இணைந்துள்ள படம் ‘துருவநட்சத்திரம்’. முதலில் இப்படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை அனு இமானுவேல் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதன் பிறகு அனு இமானுவேல் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக ரிது வர்மா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியானது. இப்போது ரிது வர்மாவுடன் மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் இப்படத்தின் ஒரு கட்டப் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் அடுத்து நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கலந்து கொண்டு நடிக்கவிருக்கிறார்களாம். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார் என்பதும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;