கன்னட திரைப்பட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா!

நடிகை பாவனா திருமண நிச்சயதார்த்தம்! கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனை மணக்கிறார்!

செய்திகள் 10-Mar-2017 10:28 AM IST VRC கருத்துக்கள்

‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வெயில், தீபாவளி, வாழ்த்துக்கள், அசல் உட்பட பல தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு, கன்னட படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் பாவனா! இவருக்கும் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. கன்னட மொழியில் பாவனா நடித்த ‘ரோமியோ’ என்ற படத்தை தயாரித்தவர் நவீன். 2012-ல் வெளியான இப்படத்தின் படப்பிடிப்பின்போது நவீனுக்கும், பாவனாவுக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று (9-3-17) கேரளாவில் பாவனாவின் சொந்த ஊரான திருச்சூரில் நடைபெற்றது. பவனாவின் வீட்டில் எளிமையாக நடைபெற்ற இந்த திருமன நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பவனாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களது திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்த வருட இறுதியில் இவர்கள்து திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தற்போது பிருத்திவி ராஜுடன் ‘ஆதம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வரும் பாவனா தொடர்ந்து படங்களில் நடிப்பாராம்.

#Bhavana #ChittiramPesuthadi #Veyil #Deepavali #Aasal #Naveen #Vazhthukkal #Aarya #Romeo #BhavanaWedding

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காவியத்தலைவன் டீரைலர்


;