விதார்த்தால் தள்ளிப்போன ‘விழித்திரு’ படப்பிடிப்பு!

விதார்த்தால் தள்ளிப் போன மீரா கதிரவனின் ‘விழித்திரு’ படப்பிடிப்பு!

செய்திகள் 7-Mar-2017 11:47 AM IST VRC கருத்துக்கள்

‘அவள் பெயர் தமிழரசி’ படத்தை இயக்கிய மீராகதிரவன் இயக்கி, தயாரித்துள்ள படம் ’விழித்திரு’. இரண்டு வருடத்திற்கும் மேலாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தில் விதார்த், கிருஷ்ணா, வெங்கட் பிரபு, தம்பி ராமையா, தன்ஷிகா, அபிநயா, எஸ்.பி.பி.சரண், ராகுல் பாஸ்கரன், ஏரிகா ஃபெர்னான்டஸ் பேபி சாரா, நாகேந்திரபாபு (சிரஞ்சீவியின் சகோதரர்), டி.ராஜேந்தர், அஷ்மிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது இந்த படம் காலதாமதம் ஆனதற்கான சில காரணங்கள் குறித்து இயக்குனர் மீரா கதிரவன் பேசும்போது,

‘‘ஒரு இரவில் நடக்கும் நான்கு கதைகள்! அந்த கதைகள் ஒரு புள்ளியில் முடிகிற மாதிரி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இரவில் நடப்பது மாதிரி கதை அமைக்கப்பட்டுள்ளதால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பும் இரவு நேரத்தில் தான் நடந்தது. கிட்டத்தட்ட 20 நடிகர், நடிகைகள் நடிக்கும் இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் விதார்த்துக்கு அஜித்தின் ‘வீரம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது அஜித்தின் ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பும் நடந்து வந்ததால் விதார்த் திடீரென்று அப்படத்தின் படப்பிடிப்பிற்கு போய் விட்டார். இதனால் ‘விழித்திரு’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட 6 மாத காலம் தள்ளிப் போனது. 20 நடிகர், நடிகைகளை ஒருங்கிணைப்பது என்பது கஷ்டமான வேலை! மீண்டும் எல்லோரையும் ஒருங்கிணைத்து இப்படத்தை எடுத்து முடிப்பதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது. ஒரு இயக்குனர் என்பதை விட ஒரு தயாரிப்பாளரா நான் கஷ்டப்பட்டது அதிகம். ஒரு தயாரிப்பாளரின் வலி என்ன என்ன என்பது இப்படத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். இருந்தாலும் எல்லோருடைய ஒத்துழைப்பாலும் படத்தை எடுத்து முடித்து விட்டேன். வருகிற 17 ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்’’ என்ற மீரா கதிரவன் ‘‘இப்படத்தின் புரொமோஷனுக்கு கூட விதார்த் வரவில்லை. படத்தில் நடிப்பவர்கள் அந்தந்த படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு கண்டிப்பாக வரவேண்டும்’’ என்றார். இந்த படத்தை தமிழகம் முழுக்க ‘விடியல்’ ராஜுவின் ‘சௌந்தர்யன் பிக்சர்ஸ்’ வெளியிடுகிறது.

‘விழித்திரு’ படத்தின் ஒளிப்பதிவை விஜய் மில்டன், ஆர்.வி.சரண் ஆகியோர் கவனித்திருக்க, சத்யன் மகாலிங்கம் இசை அமைத்துள்ளார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்துள்ளார். டி.ராஜேந்தர் இயக்கி தயாரிக்கும் படங்கள் தவிர அவர் வெளிப் படங்களுக்கு பாடல் எழுதி, பாடியதில்லை. ‘விழித்திரு’ படத்திற்காக டி.ராஜேந்தர் ஒரு பாடலை எழுதி பாடியிருப்பதோடு அந்த பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார்.

#Vizhithiru #Krishna #Vidharth #VenkatPrabhu #Dhansika #EricaFernandes #Abhinaya #VijayMilton #RVSaran #PraveenKL #NBSrikanth #MeeraKathiravan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;