மறு திருமணம் – இயக்குனர் ஏ.எல்.விஜய் விளக்கம்!

வதந்திகளை நம்ப வேண்டாம் - இயக்குனர் ஏ.எல்.விஜய் வேண்டுகோள்!

செய்திகள் 3-Mar-2017 11:52 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகை அமலாபால் இருவரும் சட்டபூர்வமாக பிரிந்த நிலையில், ஏ.எல்.விஜய் விரைவில் மறு திருமணம் செய்யவிருக்கிறார் என்றும், அவருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வருகிறார்கள் என்பது போனற தகவல்கள் மீடியாக்களில் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இது குறித்து ஏ.எல்.விஜய் விளக்கம் அளித்து ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில்,
‘‘சமீப நாட்களாக ஒரு சில ஊடங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்பது மாதிரி ஜோடிக்கப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றது. இதுபோன்ற ஆதாரமற்ற, அங்கீகரிக்கப்படாத செய்திகள் என்னை மேலும் மேலும் வருத்தப்பட வைக்கின்றது. என்னுடைய வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்து வரும் ஊடக நண்பர்களிடம் இது போன்ற செய்திகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிற தார்மீக உரிமை எனக்கு இருக்கிறது. ரசிகர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய கடமை! அதை முழு மனதோடு நிறைவேற்றுவேன். அதுதான் என்னுடைய தற்போதைய பணி என்று குறிப்பிட்டுள்ளார்.

#ALVijay #AmalaPaul #Thalaivaa #Devi #Vanamagan #Kireedam #Madrasapattinam #ALAzhagappan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;