நயன்தாராவின் ‘டோரா’ ரிலீஸ் ப்ளான்!

கோடை விடுமுறையில் நயன்தாராவின் டோரா!

செய்திகள் 27-Feb-2017 10:59 AM IST VRC கருத்துக்கள்

தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள ’டோரா’வின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேமிசந்த் ஜபக்கும், சற்குணமும் இணைந்து தயாரித்து வரும் இப்படம் மார்ச் 31, அல்லது ஏப்ரல் 7-ஆம் தேதி திரைக்கு வந்து விடும் என்று இப்படம் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் நயன்தாராவுடன் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடிக்க, விவேக் மெர்லின் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸருக்கு ரசிகர்களிடம் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. நயன்தாரா நடிப்பில் ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்காக அனிருத் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Dora #Nayanthara #Maya #DassRamasamy #NemichandJhabak #Sargunam #ThambiRamaiah #HarishUthaman #VivekMerlin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;