நடிகர் தவக்களை மரணம் - இன்று இறுதி சடங்கு!

’முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தவக்களை திடீர் மரணம்!

செய்திகள் 27-Feb-2017 10:22 AM IST VRC கருத்துக்கள்

கே.பாக்யராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தவக்களை. இந்த படம் 1983-ல் வெளியானது. சிட்டிபாபு என்பது தான் தவக்களையின் நிஜ பெயர். 3 அடி மட்டுமே உயரம் கொண்ட தவக்களை தனது முதல் படத்தின் மூலமே பெரும் கவனம் பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல மொழிகளிலாக நூற்றுக்கணக்கான படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நேற்று காலை சென்னை திரும்பிய தவக்களைக்கு திடீரென்று மாரடைப்பு எற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள்ளாகவே அவர் திடீரென்று மரணம் அடைந்தார். சென்னை வடபழனியில் வசித்து வந்த தவக்களையின் சொந்த ஊர் ஆந்திரமாநிலம் நெல்லூர். 42 வயதான தவக்களைக்கு போதுமணி என்ற மனைவி இருக்கிறார். குழந்தைகள் கிடையாது. மரணம் அடைந்த தவக்களையின் இறுதி சடங்கு இன்று காலை வடபழனியில் உள்ள ஏவி.எம் மையானத்தில் நடைபெறுகிறது. திரைப்படங்களின் மூலம் நம்மையெல்லாம் சிரிக்க வைத்த தவக்களையின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலர் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவுக்கு நடிகர் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது.

#Thavakalai #MundhanaiMuduchi #KBhagyaraj #CityBabu #Vadapazhani #ActorThavakalaiPassesAway

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;