கோலாலம்பூர் செல்லவிருக்கும் ‘பொட்டு’ படக்குழுவினர்!

கோலாலம்பூரில் பரத், நமீதா, இனியா நடிக்கும் ‘பொட்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

செய்திகள் 22-Feb-2017 4:02 PM IST VRC கருத்துக்கள்

பரத், நமீதா, இனியா, ஸ்ருஷ்டி டாங்கே முதலானோர் நடிக்கும் படம் ‘பொட்டு’. ‘சௌகார் பேட்டை’ படத்தை தொடர்ந்து வடிவுடையான் இயக்கி வரும் இப்படத்திற்கு அம்ரிஷ் கணேஷ் இசை அமைக்கிறார். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் ‘பொட்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 25-ஆம் தேதி மாலை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது. இதற்காக பரத், நமீதா, இனியா, ஸ்ருஷ்டி டாங்கே, அம்ரிஷ் கணேஷ், வடிவுடையான் உட்பட படக்குழுவினர் கோலாலம்பூர் செல்லவிருக்கிறார்கள். இந்த படத்தை ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ் மற்றும் ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

#Bharath #Namitha #Ineya #SrustiDonge #Pottu #Vadivudaiyan #AmrishGanesh #Johnes #PottuMovie

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

படைவீரன் - மாட்டிகிட்டேன் வீடியோ பாடல்


;