‘‘எமனில் எனக்கு வித்தியாசமான ரோல்!’’ - மியா ஜார்ஜ் நம்பிக்கை

ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘எமன்’ படத்தில் தனக்கு வித்தியாசமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாக மியா ஜார்ஜ் கருத்து

செய்திகள் 21-Feb-2017 10:39 AM IST Chandru கருத்துக்கள்

ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘நான்’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகராக களமிறங்கினார். அதேபோல் அவரின் இயக்கத்தில் வெளிவந்த இன்னொரு படமான ‘அமர காவியம்’ படத்தின் மூலம் மியா ஜார்ஜ் நடிகையாக தமிழுக்கு அறிமுகமானார். இந்த இருவரையும் இணைத்து தற்போது ஜீவா சங்கர் இயக்கியிருக்கும் படமான ‘எமன்’ வரும் வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அமரகாவியம், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, ரம் என இதுவரை 5 படங்களில் நடித்துள்ள மியா ஜார்ஜிற்கு ‘எமன்’ படத்தில் வித்தியாசமான ரோல் கொடுக்கப்பட்டதால்தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

‘‘எமன் படத்தை ஒப்புக் கொண்டதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று... என்னை அறிமுகப்படுத்திய ஜீவா சங்கர் இயக்கும் படம் என்பதோடு, தமிழ் சினிமாவின் மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் விஜய் ஆண்டனி ஹீரோ என்பது. மற்றொன்று இப்படத்தில் நான் நடிக்கும் கேரக்டர். வழக்கமான தமிழ்ப்பட நாயகிபோல் அல்லாமல், வித்தியாசமான வேடம் இப்படத்தில் எனக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், முதல்முறையாக இப்படத்தில்தான் எனக்கு தனியாக பாடல் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நான் நடிகையாக நடிக்கிறேன். முழுப்படமும் என்னைச் சுற்றித்தான் நகரும்!’’ என நம்பிக்கையாக பேசியிருக்கிறார் நடிகை மியா ஜார்ஜ்.

#MiyaGeorge #AmaraKaaviyam #Yaman #VijayAntony #JeevaShankar #Naan #RUM #Vetrivel #OruNaalKoothu #IndruNetruNaalai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;