டெரரர் லுக்கில் மிரட்டும் ‘பலூன்’ ஜெய்!

நேற்று வெளியான ஜெய்யின் ‘பலூன்’ பட ப்ரீலுக் டீஸருக்கு சமூக வலைதளங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

செய்திகள் 20-Feb-2017 10:24 AM IST Chandru கருத்துக்கள்

எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ், வடகறி என தொடர்ந்து ரொமான்ஸ் ஹீரோவாக வலம் வந்த ஜெய் ‘வலியவன்’ படத்தின் மூலம் சிக்ஸ் பேக் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். ஆனால் அதன் பிறகு வெளிவந்த புகழ், சென்னை 28 2ஆம் பாகம் ஆகியவை மீண்டும் ஜெய்க்கு காமெடி, காதல் ஹீரோ அந்தஸ்த்தையே கொடுத்தன. இந்நிலையில், அவர் தற்போது நடித்து வரும் ‘பலூன்’ படம் அவருடைய கேரியரில் அடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது அப்படத்தின் ப்ரீலுக் டீஸர். நேற்று வெளியான இந்த டீஸர், சமூக வலைதள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘ஜோக்கர்’ கெட்அப்பில் முதுகு காட்டி நடந்துசெல்லும் ஜெய், டீஸரின் இறுதியில் திரும்பி நின்று சிரிக்கும் ‘டெரர் லுக்’ காட்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

70எம்எம், மாஸ்டர் பிளான் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சினிஷ் இயக்கி வருகிறார். அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர் இப்படத்தின் நாயகிகளாக நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.#Jai #EnakkuVaaithaAdimaigal #Anjali #JananiIyer #Arunbalaji #KandasamyNandhakumar #DhilipSubbarayan #Yuvan #Balloon

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;